கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா-பஞ்சாப் அணிகள்: ஐபிஎல் டி20 தொடரில் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி துவங்க உள்ளது. இரு அணிகளுமே இத்தொடரில் இதுவரை தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சின் ஆண்ட்ரே ரசல், அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். வெற்றிக்கு இதுவே திருப்பு முனையாக அமைந்தது.

அணியின் ஓபனர் நிதிஷ் ராணாவும் சிறப்பாக ஆடினார். தவிர கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் என கொல்கத்தா அணியின் பேட்ஸ்மென்கள், பஞ்சாப் பவுலர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா அணியின் பவுலர்களில் பியூஷ் சாவ்லாவும், பெர்கூசனும் சற்று நம்பிக்கை தருகின்றனர். முதல் போட்டியில் இந்த அணியின் அனைத்து பவுலர்களுமே சராசரியாக ஓவருக்கு 8 ரன்களும்இ அதற்கு மேலும் விட்டுக் கொடுத்துள்ளனர்.

பஞ்சாப் அணியிலும் மிரட்டல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்களை குவித்தார்.

தவிர லோகேஷ் ராகுல், மயாங்க் அகர்வால், சர்பிராஸ் கான் என டாப்-ஆர்டர் பேட்ஸ்மென்கள் நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் அஸ்வின் தலைமையில் மொகமது ஷமி, சாம் கரன் என பந்து வீச்சும் பலமாகவே உள்ளது.

ஆனால் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜாஸ் பட்லரை சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் செய்தததால், அணியின் கேப்டன் அஸ்வின், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை என்றே கூற வேண்டும்.

இப்போட்டியில் 4 சிக்சர்களை விளாசினால், ஐபிஎல்லில் முதன் முதலாக 300 சிக்சர்கள் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் எட்டுவார் என்பதால், பஞ்சாப் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

Leave a Comment