ஆன்மீகம் கிறிஸ்தவம்

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை):

(1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்குஎன் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். இங்கே, தேவன் உலகின் பாவங்களை தன் மீது வைத்ததால், இயேசு தனது கைவிடப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார் – அதன் காரணமாக, தேவன் இயேசுவிடம் இருந்து “விலகி” போக வேண்டியிருந்தது. பாவத்தின் எடையை இயேசு உணர்ந்துகொண்டதால், அவர் நித்தியம் முழுவதுமாய் ஒரேஒரு முறை மட்டும் தேவனிடமிருந்து ஒரு பிரிவை அனுபவித்தார். இது சங்கீதம் 22:1 இல் உள்ள தீர்க்கதரிசன கூற்றின் நிறைவேறுதலாகும்.

(2) பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (லூக்கா 23:34). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை முழுமையாக அறிந்திருக்கவில்லை ஏனெனில் அவர்கள் அவரை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை. தெய்வீக சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையினால் அவர்கள் மன்னிப்புக்கு தகுதியானவர்கள் என்று அர்த்தமல்ல, கிறிஸ்துவின் வேண்டுதல் அவரை பரியாசம் பண்ணும்போதும் கூட அவர் காண்பித்த அவருடைய தெய்வீக கிருபையின் எல்லையற்ற இரக்கத்தின் வெளிப்பாடாகும்.

(3) இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23:43). இந்த கூற்றில், சிலுவையில் மறித்துக்கொண்டு இருந்த கள்ளர்களில் ஒருவனுக்கு அவன் இயேசுவோடு பரலோகத்தில் இருப்பான் என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார். இது எதற்காக வழங்கப்பட்டது என்றால், அவன் மறித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட, குற்றவாளியாகிய கள்ளன் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவர் யாராக இருக்கிறார் என்பதை அங்கீகரித்தான் (லூக்கா 23:42).

(4) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார் (லூக்கா 23:46). இங்கே, இயேசு விருப்பத்துடன் தனது ஆத்துமாவை பிதாவின் கைகளில் கொடுத்த செயல், அவர் இறக்கப்போகிறார் என்பதையும், பிதாவாகிய தேவன் அவருடைய பலியை ஏற்றுக்கொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறது. அவர் “தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்” (எபிரெயர் 9:14).

(5) அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: “அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26-27). இந்த வசனத்தில் இயேசு, எப்போதும் இரக்கமுள்ள மனதுருகும் மகனாக, அவருடைய பூமிக்குரிய தாய் அவருடைய மரணத்திற்குப் பிறகு கவனித்துக்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறார்.

(6) தாகமாயிருக்கிறேன் என்றார் (யோவான் 19:28). சங்கீதம் 69:21 -ல் இருந்து மேசியாவின் தீர்க்கதரிசனத்தை இயேசு இங்கே நிறைவேற்றுகிறார்: “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.” அவர் தாகமாக இருப்பதாகக் கூறி, அவர் ரோம போர்ச்சேவகர்கள் அவருக்கு கசப்புக் கலந்த காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள், இதுவும் சிலுவையில் அறையப்படுபவர்களுக்கு கொடுப்பது வழக்கம், இதனால் இந்த தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினார்.

(7) முடிந்தது!” (யோவான் 19:30). இயேசுவின் இந்த கடைசி வார்த்தைகள், அவருடைய பாடுகள் முடிந்துவிட்டது மற்றும் அவருடைய பிதா அவருக்கு ஒப்புவித்த முழு வேலையும், அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பது, அற்புதங்களைச் செய்வது மற்றும் அவருடைய ஜனங்களுக்கு நித்திய இரட்சிப்பைப் அளிப்பது, என யாவும் முடிந்தது, நிறைவேற்றப்பட்டது, நிறைவேறியது. பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment