Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்..

சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ‘பழிவாங்கும் கொடி’ ஏற்றப்பட்டது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இக்கொடி கமேனி ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டுவதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.

சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் முழுக்க போராட்டம்

கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் என்று ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பாக ஷியா பிரிவினருக்கு எதிரான, வெளிப்படையான போர் அறிவிப்பாக கருதப்படுகிறது” என்று கூறினார்.

சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது

இதையடுத்து, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ள ஈரான், வளைகுடாவில் அமெரிக்காவின் நேச நாடுகள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈரான் அதிபர் ஆவேசமாக கூறிய நிலையில், தற்போது ஈரானில் இந்த சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்ப்படு வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். அவரை கொல்ல முடிவு செய்த அமெரிக்கா, இஸ்ரேலின் உதவியுடன் அதை செய்து முடித்து உள்ளது.

ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்

கமெனியின் இருப்பிடம், அன்றாட நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் உளவுத்துறை தகவல்களை வழங்கியது. இதன்மூலம் அயதுல்லா அலி கமெனி தனது அலு வலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருப்பது தெரியவந்ததும் அந்த கட்டிடம் மீது தாக்கு தல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமேனி மட்டுமின்றி அவரது மகள், மருமகன் ஆகியோரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் நாட்டை அழிக்கும் திட்டத்தை வகுத்தவர் கமேனி. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் எல்லைகள் வரை தன் கரங்களை விரித்த ‘ஈரானிய ஆக்டோபஸின் தலைவன்’ என்றும் அவர் அறியப்பட்டார்” என்று குறிப்பிட்டது.

மூன்று பேர் கொண்ட தற்காலிக தலைமை

கமேனியின் மரணத்திற்குப் பிறகு, ஈரான் ஒரு புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக தலைமை கவுன்சிலை அமைத்துள்ளது. 66 வயது மதகுரு ஒருவரும் இக்கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலிரேசா அராஃபி அதன் தற்காலிக தலைமை கவுன்சிலின் நீதி உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment