கிரிக்கெட் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் இந்த தொடரில் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதிலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ரூணல் பாண்டியா 42 ரன்களும், கடைசி ஓவரில் ஒரு காட்டு காட்டிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு (0), சேன் வாட்சன் (5) மற்றும் சுரேஷ் ரெய்னா 16 என முதல் மூன்று வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதனையடுத்து 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறிய நிலையில் களமிறங்கிய தோனியும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ் தனி ஒருவனாக போராடி 58 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி பேசியதாவது;

சில விசயங்கள் தவறாக சென்றதாக உணர்கிறேன். துவக்கத்தில் சிறப்பாக துவங்கிய நாங்கள் கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். பீல்டிங்கில் நிறைய கேட்ச்களை விட்டது போட்டியை எங்களுக்கு எதிராக மாற்றிவிட்டது. கடைசி கட்டத்தில் பந்துவீச்சு அவ்வளவு பிரமாதமாக இல்லை. இந்த தோல்வியில் இருந்து சில விசயங்களை கற்றுள்ளோம். அடுத்தடுத்த போட்டிகளில் தவறை சரி செய்து கொள்வோம். பிராவோவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவரது இடத்தை நிரப்புவதற்கு கூட சரியான வீரர்கள் தற்பொழுது இல்லை. ஏற்கனவே லுங்கி நிகிடி மற்றும் டேவிட் வில்லே ஆகியோர் இல்லை, இதன் காரணமாகவே மைதானத்தின் தன்மையை பொறுத்து வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி வருகிறோம்” என்றார்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment