ஆரோக்கியம் உடற்பயிற்சி

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது உடலில் எந்த பாதிப்பும் உண்டாகாது. குறிப்பிட்ட தசைகள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் இதனுடன் தொடர்புடைய எலும்புகளும், மூட்டுகளும் பாதிப்படைகின்றன. பல வருடங்களுக்கு முன்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக சைக்கிளும் இருந்தது.

நம் அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்ட சைக்கிள், நவீன காலகட்டத்தின் முன்னேற்றத்தினால் சைக்கிளின் உபயோகத்தை நாம் குறைத்து விட்டோம். தற்போது மோட்டார் இருசக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் இந்த சைக்கிள் பழக்கத்திற்கு நாம் திரும்பவும் சென்றுவிடுவோம். சைக்கிள் ஓட்டுவதினால் என்னென்ன பயன்கள் உண்டு என்பதை பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க…..

சைக்கிள் ஓட்டுவதால் இயங்கும் முக்கியமான தசைகள் :

🚴 சைக்கிள் ஓட்டுவதால் இயங்கும் முக்கியமான தசைகள் என்றால் தொடை மற்றும் முழங்காலில் உள்ள தசைகளாகும். தொடைகள் இரண்டும் சைக்கிள் ஓட்டும்போது அதிகப்படியான வேலை செய்யும்.

🚴 குறிப்பாக தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதால் உடல்கட்டு நன்றாகவும், வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

🚴 சைக்கிள் பயிற்சி கெண்டைக்காலில் உள்ள soleus மற்றும் gastrocnemius தசைகள் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.

🚴 கெண்டைக் காலில் உள்ள soleus தசை பெடல் பண்ணும்போது பாதத்தை மிதிக்கவும், gastrocnemius மீண்டும் பெடலை கீழ்புறம் அழுத்தி மிதிக்கவும் பயன்படுகிறது.

🚴 தொடையில் உள்ள hamstring தசையானது முழங்கால் மூட்டை வழித்து சைக்கிள் பெடலை அழுத்த பயன்படுகிறது. Quadriceps தசைகள் சைக்கிளை வேகமாக அழுத்தி மிதிக்க பயன்படுகிறது.

சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள் :

💫 சைக்கிளிங் செய்யும் பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைவதால் உடலின் எடையும் குறைகிறது.

💫 சர்க்கரை நோய்க்கு மருத்துவர்கள் கொடுக்கும் தீர்வு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதுதான். சைக்கிளிங் செய்வதால் உடலில் குளுகோஸ் அளவு குறைகிறது. சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

💫 சைக்கிள் ஓட்டுகிறவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவர். ஒரு சிறந்த உடற்பயிற்சிக்கு பின்னர் உடலில் புத்துணர்ச்சி அடையச் செய்யும் ஹார்மோன்கள் சுரக்கிறது.

💫 சைக்கிள் ஓட்டும் போது, நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம்.

💫 தினமும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்வதால், இதயத்தில் புது ரத்த நாளங்கள் ஏற்படுகின்றன. இவை, இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

Recent posts

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்கள்.

அழகிற்காக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு...
Thamil Paarvai

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

Leave a Comment