இலங்கை உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய அப்பையா சிறீதரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இணைந்து கொண்ட யாழ். பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர்.

1985ஆம் ஆண்டு யாழ். குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கினார்.

பிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீழ விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான்.

மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும், பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை அவர் உருவாக்கியுள்ளார்.

பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் பிரித்தானியக் கிளையின் பொறுப்பாளராக செயற்பட்டுவந்தார்.

அத்துடன், தமிழ் அகதிகள் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாகிய ரி.ஆர்.ரெக் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment