Featured Uncategorized இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை.

அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறிதரன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவசர அவசரமாக இக்கூட்டம் கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாகக் கூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழரசுக் கட்சியின் முக்கிய  உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாத  பெரும்பான்மையில்லாத சிறு கூட்டமாக அது நடந்து முடிந்துள்ளது.

கட்சி விதிகளுக்கு முரணாக முடிவுகளை எடுத்ததோடு அதை அவசர அவசரமாக  கட்சியின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் ஊடகங்களுக்கு  பின்வரும் செய்தியை அறிவித்த அவலமும் நடந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசா அவர்களை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதாகவும்,தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை தாம் ஆதரிக்கவில்லை என்றும்,பா. அரியநேத்திரன் ஜனாதிபதி வேட்பாளர் நிலையிலிருந்து விலகவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும்,  தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.

சுமந்திரனும் சாணக்கியனும் ஆரம்பத்தில் இருந்து எதற்காக   இத்தனை பரபரப்பாகவும் மனதை நிறைத்த பதட்டத்தை காட்டிக் கொள்ளாமலும் ஒரு அக்கப்போரை

ஊர் ஊராக நடத்தி வந்தார்கள் என்பதை தமிழரசுக்கட்சியின் தலைமையும்  தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அறிந்து கொண்டனர்.

அதேபோல்  அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் இன்று தெளிவுக்கு வந்துள்ளனர்.

இன்று தமிழ் பொது வேட்பாளருக்கான  ஆதரவு வடக்குக் கிழக்கில் கட்சி வேறுபாடுகளின்றி பெருகிவருவதும்  அதில் தமிழரசுக் கட்சியின், முக்கிய தலைவர்கள்,  உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் கணிசமாக களத்தில் இறங்கி செயற்பட்டு வருவதையும் அனைவரும் அறிவர்.

சுமந்திரன் – சாணக்கியன் போன்றோர் தமிழினத்தின் நன்மைக்காக தமிழரசுக்  கட்சியில் இணைந்து  கொண்டார்கள் என இனிமேலும் தமிழரசுக்கட்சி நம்பினால் தந்தை செல்வா அன்று கூறியதுபோல் கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும்,  கட்சியின் களைகளை கண்டறிய தமிழ்ப் பொதுவேட்பாளர்

தமிழரசுக்கட்சிக்கு உதவியிருப்பதாக  மக்கள் பேசிக்கொள்வதையும் பரவலாகக் கேட்க முடிகிறது.

Recent posts

Grand Theft Auto VI Portable Game Desktop Direct Link 2026

📎 HASH: 50fbc2fe768e0237200107a7d0cfd890 | Updated: 2026-10-07 Verify CPU: multi-threading optimized CPU RAM: enough space for background apps and OS Disk...
admin

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

0x7969561b

0x7969561b
admin

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

Leave a Comment