Featured Uncategorized இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கேவி தவராசா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 31ம் திகதி  சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்குவதாக எடுத்த தீர்மானம் தொடர்பில் தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு எமது  செய்தியாளர் கேட்டதற்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு அழைப்பு கிடைத்தது அழைப்புடன் என்ன எனன விடையங்கள்  பேசுவது தொடர்பில் எழுதி அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை ஒரு நாளில் தெரிவித்து மறுநாள் முடிவு எடுக்கக்கூடிய விடயங்களாக இருக்கவில்லை.

கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்ற போது பொது வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தாமல் நேரடியாக எதிர்ப்பது அரசியல் நாகரீகம் அல்ல  என்ற கருத்தை முன்வைத்தேன்

அதுமட்டுமில்லாது தமிழரசு கட்சியினுடைய  பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்ற  நிலையில் நாங்கள் எடுக்க முடிவு எமது கட்சியின் எதிர்கால அரசியலை பாதிக்காத முடிவுகளாக இருக்க வேண்டும்.

தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழ் பொது வேட்பாளருடனும் பேச்சுவார்த்தை நடாத்தாமல் அவரை விலகுமாறு கூறுவது ஏற்புடையது அல்ல என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன் .

ஏற்கனவே தமிழரசு கட்சி பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியத்துடன் பயணிப்பவர்கள் இணைந்து பயணிக்கின்ற நிலையில் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக முடிவுகளை எடுக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளர் விடையதில் கட்சி முடிவுகளை எல்லாம் பார்க்க மக்களின் விருப்பங்கள் அபிப்பிராயங்கள் கேட்டு அறித்த பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டும்.

 இந்த முடிவு எடுத்தப்பட்ட நேரத்தில் தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் சிறிநேசனும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அபிப்பிராயங்களை கேட்டறியாமல் தெற்கு வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பது தனக்கு உடன்பாடு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்

Recent posts

Grand Theft Auto VI Portable Game Desktop Direct Link 2026

📎 HASH: 50fbc2fe768e0237200107a7d0cfd890 | Updated: 2026-10-07 Verify CPU: multi-threading optimized CPU RAM: enough space for background apps and OS Disk...
admin

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

0x7969561b

0x7969561b
admin

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

Leave a Comment