ஆரோக்கியம் பொது மருத்துவம்

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு பற்களில் உள்ள கறையைப் போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

😃 ஒரு கைப்பிடியளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் பல் துலக்கியவுடன், அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரியில் சிறிதளவு எடுத்து லேசாக தேய்த்து வாய் கொப்பளியுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்தால் பற்களில் உள்ள கறையை எளிதாக நீக்கலாம்.

😃 இரவு படுப்பதற்கு முன் ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தப்பிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்து, பற்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

😃 தினந்தோறும் 1 சொட்டு ரோஸ்மெரி ஆயிலை ஒரு டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து வாயை கொப்பளித்துப் பின்னர் பல் துலக்குவதன் மூலம் கறைபடிந்த பற்களை சுத்தமான பற்களாக மாற்றலாம்.

😃 தினந்தோறும் பற்களை கற்றாழை ஜெல் கொண்டு தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்கலாம். மேலும் கற்றாழையானது வாய் துர்நாற்றத்தைப் போக்க கூடியது.

😃 1 டீஸ்பூன் கிராம்பு பொடியுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலமும் சுத்தமான பற்களைப் பெறலாம்.

😃 சீஸ் சாப்பிடுவதால் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து பற்களில் கறை படிவது தடுக்கப்படும். மேலும் இவை, பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதை தடுக்கும். இதனால் உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

😃 பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.

😃 பற்களில் உள்ள கறையைப் போக்க கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும். மேலும் கொய்யாப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment