உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிள்ளைகள் அனைவரையும் மருத்துவதுறைக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலி.

இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் வன்முறைக்கு பயந்து தப்பி ஓடி இங்கிலாந்து சென்றவர் அசன்-உல்-ஹக் சவுத்ரி (81). கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் மாதம் 28ஆம் திகதி,இவர் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றிலேயே உயிரிழந்தார் .

சவுத்ரி ஒரு கணித மற்றும் கணனி அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.

இவரது 6 பிள்ளைகளும் மருத்துவர்களாக உள்ளனர்.பிள்ளைகளில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவராகவும், இரண்டு பேர் பொது மருத்துவர்களாகவும், ஒருவர் ஜூனியர் மருத்துவராகவும் ஒருவர் குழந்தைகள் நல மருத்துவராகவும், மற்றொருவர் மருந்தாளராகவும் உள்ளனர்.

தங்கள் தந்தையுடன் செலவிடும் நேரத்தையும் தியாகம் செய்து, மருத்துவப்பணியில் முன்னணியில் களம் இறங்கி கொரோனாவுக்கெதிராக போராடி வந்தனர் இவர்கள் ஆறு பேரும்.

இந்நிலையில், அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி, தனிமையில் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் இருந்தும், சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தனது மகள் பணிபுரியும் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த சவுத்ரிக்கு இரங்கல் செய்திகள் குவிகின்றன. முக்கிய காரணம், தனக்கு வாழ்வளித்த இங்கிலாந்துக்கு தனது பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்து உள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment