இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேட்டி… மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைப்பு!

நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அருண் ஜேட்லி.

கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி, 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.மலிவு விலை வீடுகளைப் பொறுத்தவரை கார்பெட் ஏரியா எனப்படும் வீட்டின் சரியான பரப்பரளவும் மற்றும் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் பரப்பளவில், 45 லட்சம் ரூபாய்க்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகள் என்ற பட்டியலுக்கு வரும் என்றும் மெட்ரோ அல்லாத மற்ற நகரங்களில் 90 சதுர மீட்டர் கார்பட் ஏரியா மற்றும் 45 லட்சம் ரூபாய் விலைக்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு வீடுகளான கணக்கில் கொள்ளப்படும் என்றும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

லாட்டரி சீட்டுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் லாட்டரி சீட்டு விவகாரம் குறித்த ஆலோசனை நடத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.அருண்ஜேட்லி டுவிட்:33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8% இல் இருந்து 1மூஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5மூஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த வரிச்சலுகை கிடைக்கும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment