நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் (03) டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் அவர் புதிய அமைச்சராக பதவியேற்றார்.
நாமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.