இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மாகந்துரே மதுஷூக்கும் எனக்கும் தொடர்பில்லை – மங்கள பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!

டுபாயில் மறைந்திருந்த பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உட்பட அவருடன் கைது செய்யப்பட்டவர்களில் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார் என்பது தொடர்பிலான விசாரணையை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் (வௌ்ளிக்கிழமை) பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்ட போது ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்டவர் தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளின் போதும் தான் தெரிவித்திருந்த போதும் தனக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு தான் யாருக்கும் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் காரணமாக தனது 30 வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே, டுபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதற்காக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment