இலங்கை செய்திகள்

யாழ். நோக்கி விரையும் பிரதமர்! பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்வதாக தகவல்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடையும் அவர் முற்பகல் 10 மணிக்கு நல்லூர்ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்.

வழிபாடுகளை முடித்து கொண்டு யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதமர் மாவட்ட செயலக அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அந்த கலந்துரையாடலை முடித்து கொண்டு நண்பகல் 12.15 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டட தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் மதிய உணவை முடித்து கொண்டு பிற்பகல் 1.45 மணியளவில் இருந்து பிற்பகல் 2 மணி வரைக்கும் நாவற்குழி மற்றும் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலங்கள் தொடர்பானஆராய்வையும் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு கோப்பாய்க்கு செல்லும் பிரதமர் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக நிர்வாக கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் பருத்தித்துறைக்கு செல்லும் அவர் பிரதேச செயலக நிர்வாக கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்லும் பிரதமர், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.

பின்னர் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் மக்களுக்கான வீட்டுத்திட்டம், பாடசாலை, பேருந்து நிலையம் உள்ளிட்டவைக்கான அடிக்கல்லை நடவுள்ளார்.

அதன் பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு செல்லும் அவர் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

Leave a Comment