உலகம் செய்திகள்

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலா நாடும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். பல்வேறு முறைகேடுகளை செய்து மதுரோ தேர்தலில் வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க நாடானது வெனிசுலா மீது புதிய பொருளாதார தடைகளை கடந்த மாதம் விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்கி வந்த அமெரிக்கா, பொருளாதார தடை விதித்ததால் அந்நாடு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் இதேபோன்று ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா மீது இந்த தடையை விதித்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை கூடுதலாக விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.அமெரிக்கா தடை விதித்துள்ள போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவு பொருட்களையும், மீதி ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபோல கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்பனை செய்ய வெனிசுலா அரசு முன் வந்துள்ளது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வெனிசுலாவின் வளங்களை விற்பனை செய்ய அதிபர் மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார். அவ்வாறு மதுரோ விற்பனை செய்தால் அது திருட்டு செயலுக்கு ஒப்பானதாகும் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவோம் என்றும் திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது என்றும் ஜான் போல்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல் டீசல், விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment