உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான லக்கிம்பூர் கேரி நேபாள எல்லையில் உள்ளது. இந்த லக்கிம்பூர் கேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக யோகேஷ் வர்மா பதவி வகிக்கிறார். நேற்று முதல் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக லக்கிம்பூர் கேரியில் உள்ள பாஜக அலுவலகத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது யோகேஷ் சர்மா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருடைய காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து காயமடைந்த எம்.எல்.ஏ யோகேஷ் வர்மா சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அபாயகட்டத்தை தாண்டியதாகவும், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக உத்திரபிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. அதே சமயம், இது தொடர்பாக எம்எல்ஏ யோகேஷ் வர்மா எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




