அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் நிப்சே ஹுசில் உள்பட 3 பேருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் நிப்சே ஹுசில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் ஹுசிலின் மனைவி பெயர் லாரன் லண்டன். இவர் ஒரு நடிகை ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ‘விக்டரி லேப்’ என்ற இசை ஆல்பத்துக்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இது இவரது முதல் இசை ஆல்பமாகும். இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பம் விருதை இது பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...




