ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2021-ம் ஆண்டு காலாவதியாகும் ஷாம்பு , பவுடர் பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டன. நடந்து முடிந்த சோதனையின் முடிவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஃபார்மால்டிஹைட் 38 முதல் 45% நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயரில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் மாசுப்பொருளாகக் கலந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்துகொள்ள நடைமுறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்தி இதுதான் என கூறுகின்றனர். மேலும் இது கட்டுமான பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்புவினை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிக அளவில் நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்இ இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என ஆய்வில் கண்டிறியப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை என கூறி வருகிறது. இந்த பரிசோதனையில் நச்சின் அளவு குறித்து சொல்ல முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தரப்பரிசோதனையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தோல்வியடைந்ததையடுத்து, இதர சோதனைகளுக்காக தற்போது மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார். இதற்கிடையில் அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் தொடர்ந்து பயன்படுத்தி புற்றுநோயால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக, பல நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது பேபி ஷாம்புவிலும் புற்றுநோய் உருவாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதாக ஆய்வு முடிவு வந்திருப்பது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




