Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தோனேசியா குகையில் காட்டுப்பன்றி ஓவியம்

உலகில் மொழி தோன்றுவதற்கு முன் சைகை, ஓவியங்கள் மூலம் மக்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு வரையப்பட்ட தொன்மையான ஓவியங்கள், உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்படுகிறது. இப்போது இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு தீவின் குகைச் சுவர் ஒன்றில் வரைந்திருந்த ஓவியத்தைப் பற்றி வாங்க பார்க்கலாம்.

வியக்க வைக்கும் பாறை ஓவியங்கள் :

👉 இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆடம் ப்ரூவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.

👉 இந்த வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்கள் மல்பெரி வண்ண சிவப்பு தாது கொண்டு வரையப்பட்டவையாகும்.

👉 கிட்டத்தட்ட 190 பவுண்டுகள் (85 கிலோகிராம்) வரை எடையுள்ள இந்த வார்டி பன்றிகள் (warty pig) இன்றும் இந்தோனேசியாவின் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன.

👉 இருப்பினும், இதன் எண்ணிக்கையானது தற்பொழுது குறைந்து கொண்டே வருகின்றது என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மையத்தின் தொல்பொருள் பேராசிரியரான ஆடம் ப்ரூம் கூறியுள்ளார்.

👉 லியாங் பாலங்காஜியா 1, (Leang Balangajia 1) என்ற மற்றொரு ஆராய்ச்சி குழுவினரால், அதன் அருகிலுள்ள மற்றொரு குகை ஒன்றில், சுமார் 6.1 முதல் 3.6 அடி (187 முதல் 110 செ.மீ) வரை நீளமுடைய பெரிய வர்ணம் பூசப்பட்ட பன்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

👉 அந்த குகையில் இருந்த பழமையான இரண்டு விலங்குகளின் ஓவியங்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

👉 டிசம்பர் 2017 இல், ப்ரூம் மற்றும் அவரது குழுவினர், இந்தோனேசிய தீவான சுலவேஸியில் (Sulawesi) உள்ள லியாங் டெடோங்கே (Leang Tedongnge) குகையில் இருந்து மூன்று வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை கண்டறிந்தனர்.

👉 ஹேரி, வார்டி பன்றிகள் (warty pig) சுலவேஸித் தீவுக்கு தனித்துவமானவையாகும்.

👉 இந்த பன்றிகளை மனிதர்கள் வேட்டையாடி வளர்த்தார்கள் என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன.

👉 இதன்மூலம் ஆரம்பகால மனிதர்கள் இந்த வார்டி பன்றிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெளிவாகத் தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

👉 இந்த தீவின் மற்றொரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட வார்டி பன்றி (warty pig) ஒன்று, குறைந்தது 43,900 ஆண்டுகளுக்கு முந்தையது என்று 2019 ஆம் ஆண்டு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டதாக, நேச்சர் இதழில் (Nature journal) செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘இதெல்லாம் பார்க்கும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது”

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment