ஆன்மீகம் ராசிபலன்

இன்றைய ராசிபலன்

7-02-2019
ஞாயிற்றுக்கிழமை
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்.

மேஷம்: அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றிஇ அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: உற்சாகமான நாளாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகள் விஷயத்தில் யோசித்து இறங்குவது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடைஇ ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும்இ அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால்இ புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் பணியாளர்கள் வகையில் செலவுகளும் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்டு வரும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கன்னி: தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.

விருச்சிகம்: வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது வீண்மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால்இ பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அனுகூலமாக முடிந்துவிடும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை தேவை. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு: புதிய முயற்சிகளையும் வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் வீண்விவாதத்தில் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும். காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடைஇ ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் அல்லது நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால்இ வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் நீண்டநாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய பொருள் கிடைத்து மகிழ்ச்சி தரும்.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment