ஆன்மீகம் கிறிஸ்தவம்

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். அந்தக் கழுதைக்குட்டி கொண்டு வரப்பட்டபோது, இயேசு அதன் மேல் உட்காருகிறார்.

பிறகு, கொஞ்ச தூரத்தில் இருக்கிற எருசலேமுக்குச் சவாரி செய்கிறார். அந்த நகரத்துக்கு அருகில் வந்தபோது ஒரு பெரிய கூட்டமே அவரைப் பார்க்க வந்துவிடுகிறது. அப்போது ஜனங்கள் தங்களுடைய மேலங்கிகளை எடுத்து அவர் வருகிற வழியில் விரிக்கிறார்கள்.

மற்றவர்கள் ஓலைகளை வெட்டி அங்கே போடுகிறார்கள், அப்படிப் போட்டுவிட்டு யெகோவாவின் பெயரில் வருகிற இந்த ராஜாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக! என்று ஆர்ப்பரிக்கிறார்கள். மக்கள் இயேசுவை வரவேற்கிறார்கள். அந்தக் காலத்தில், இஸ்ரவேலின் புதிய ராஜாக்கள் தங்களை ஜனங்களிடம் காண்பிப்பதற்காக கழுதைக்குட்டியின் மேல் எருசலேமுக்குள் சவாரி செய்வார்கள். இதைத்தான் இயேசு செய்து கொண்டிருக்கிறார். இயேசு தங்களுடைய ராஜாவாயிருக்க விரும்புவதை இந்த ஜனங்கள் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அவரை விரும்பவில்லை. நமக்கு எப்படித் தெரியும்? ஆலயத்தில் நடந்த சம்பவத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துகிறார். இதைப் பார்த்த சிறு பிள்ளைகள் இயேசுவைப் புகழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள்.

ஆனால் அந்த ஆசாரியர்களுக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது, அவர்கள் இயேசுவிடம், இந்தப் பிள்ளைகள் சொல்வதெல்லாம் உம் காதில் விழுகிறதா? என்று கேட்கிறார்கள். ஆம், என் காதில் விழுகிறது, சிறு பிள்ளைகளுடைய வாயிலிருந்து கடவுள் துதி உண்டாகச் செய்வார் என்று பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் ஒருநாளும் வாசிக்கவில்லையா? என்று இயேசு பதிலுக்கு கேட்கிறார். அதனால் அந்தப் பிள்ளைகள் விடாமல் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவைத் துதிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் இல்லையா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி சில ஆட்கள் நம்மைத் தடுக்கலாம். ஆனாலும், இயேசு செய்யப் போகிற அதிசயமான காரியங்களைப் பற்றி நாம் தொடர்ந்து ஜனங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்போம். இயேசு பூமியில் இருந்தபோதே ராஜாவாக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டாரா? இல்லை. அப்படியானால், அவர் ஆட்சி செய்யப் போகிற அந்தக் காலம் எப்போது வரும்? இயேசுவின் சீஷர்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

Recent posts

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

புதிய மோசேயின் பிரகடனம்

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு நற்செய்தி ஆகும். திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே, இந்த நற்செய்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும்...
Thamil Paarvai

பூமியில் வாழும் விண்ணின் அரசியலமைப்பு

உலக வரலாற்றில், ஒரு மனிதரின் சொற்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் விசாரணை, கன்பூசியஸின் ஒழுக்கம், புத்தரின் இரக்கம் – இவை அனைத்தும்...
Thamil Paarvai

Leave a Comment