ஆரோக்கியம் குழந்தை பராமரிப்பு

உங்கள் பேச்சை குழந்தைகள் கேட்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்…

இன்று இருக்கும் குழந்தைகள் பயங்கர கெட்டிக்காரர்கள். தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக சாமர்த்தியம் நிறைந்தவர்கள். ஆனால், இதுவே பெற்றோகளுக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகின்றது. அனேக அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர். எனினும், அப்படியே குழந்தைகளை விட்டு விடவும் முடியாது.

1. நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது விருப்பம் இல்லாமல் இருந்தாலோ, நீங்கள் பேசுவதில் பயன் இல்லை. அதனால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்.

2. உங்கள் குழந்தை நீங்கள் கூறியதை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதனை கூறாதீர்கள். அவர்களாகவே உங்களிடம் வரும் வரை, நீங்கள் வேறு வேலையை பாருங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை கூறுவதால், அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம்.

3. ஒரு விடயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது அவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலை கொடுக்க நினைத்தாலோ, அவர்களிடம் அதிகம் வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள்,. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கு கட்டளை இடுங்கள்.

4. உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேச வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு செயலை செய்ய வேண்டினாலோ, முதலில் அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, அவர்களுக்கு அது பிடித்த வேலையா, அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று பாருங்கள்.

5. எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.

6. உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்காமல் உங்களுக்கு இம்சை கொடுத்தால், சண்டை போடாதீர்கள், மற்றும் கோபத்தை காட்டாதீர்கள். முடிந்த வரை பொறுமையாக இருங்கள். உங்கள் அமைதியே அவர்களை சிந்திக்க வைத்து, உங்கள் மீதான மரியாதையையும், பயத்தையும் உண்டாக்கும். இதனால், அவர்களே நாளடைவில், சிந்தித்து, உங்கள் பேச்சை கேட்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து, உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். கோபத்தை காட்டினால், அது எதிர்மறையாக முடிந்து விடக் கூடும்

7. உங்கள் குழந்தைக்கு தினமும் செய்ய வேண்டிய வேலை, வாரா வாரம் செய்ய வேண்டிய வேலை மற்றும் மாதா மாதம் செய்ய வேண்டிய வேலை என்று பட்டியலிட்டு அதனை வழக்கமாக்குங்கள், இப்படி செய்தால், அவர்கள் சில நாட்களிலேயே அந்த அட்டவணைக்கு பழகிக் கொண்டு, அவர்களாகவே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு சுலபமாகி விடும்.

8.  உங்கள் குழந்தைகள் மட்டும் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று இல்லை. நீங்களும் சற்று காது கொடுத்து உங்கள் குழந்தை கூறுவதை கேட்க வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் தர வேண்டும்.

9. உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்களது விருப்பம், வெறுப்பு, என்று அனைத்தையும் கண்காணியுங்கள். அப்படி அவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான பாதையில் அவர்களை எடுத்து செல்ல முடியும், மேலும் உங்கள் பேச்சையும் அவர்களை கேட்க வைக்க முடியும்.

10. குழந்தைகளுக்கு எப்போது கட்டளையிடும் பாணியும், அதிகார தோரணையும் பிடிக்காது. அதனால் அவர்களுடன் எப்போதும் விளையாட்டு தனத்தோடு நீங்களும் குழந்தையாய் மாறி அவர்களுடன் சேர்ந்து வேலை பாருங்கள். இது அவர்கள் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்கள் பேச்சையும் கேட்கத் தொடங்குவார்கள். எப்போதும், அவர்களுக்கு ஏதாவது சுவாரசியமான கதை சொல்லி உங்கள் அன்பு வலைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment