இந்தியா செய்திகள்

எதிர்கட்சிகள் நடத்தும் ஒலிம்பிக் போட்டி… பிரதமர் மோடியின் செம கிண்டல்

எதிர்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் பிரதமர் மோடி.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.

அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலா வந்தடைந்தார். மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மானிக்யா பஹதூரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்த அவர், இங்கிருந்தவாறு கார்ஜீ-பெலோனியா இடையிலான புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மிகப்பெரிய ‘கள்ளத்தொடர்பு அணி’ என்று குறிப்பிட்டார். கைகளை கோர்த்தவாறு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இந்த ‘கள்ளத்தொடர்பு அணி’ தலைவர்கள் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதும், தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிப்பேசி வருவதும்தான் இந்த கூட்டணியில் இருப்பவர்களின் முக்கிய வேலையாக உள்ளது. என்னை வீழ்த்துவதற்காக அவர்களுக்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியே நடப்பதாக தெரிகிறது. மக்களிடம் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும்? என்பதை வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எல்லாம் உணர்த்தத்தான் போகிறது எனவும் மோடி தெரிவித்தார்.

திரிபுராவில் கடந்த 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் 1.25 லட்சம் வீடுகளில் கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதையும் தனது பேச்சினிடையே அவர் சுட்டிக்காட்டினார்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment