சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.. ஓநாய.. ஆடுகளை ஓநாய் துரத்துகிறது!” என கூச்சலிட ஆரம்பித்தான். சிறுவனுக்கு உதவவும் ஆடுகளை காப்பாற்றவும் கிராம மக்கள் ஓடி வந்தனர். அவர்கள் எதையும் அங்கு கணவில்லை, சிறுவன் அவர்களின் கோபமான முகங்களைப் பார்த்து சிரித்தான். சிறுவன் விளையாடிய விளையாட்டை கிராம மக்கள் புரிந்துகொண்டு அவனை விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

சற்று நேரம் கழித்து மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தான். கிராமவாசிகள் உண்மையாகவே ஓநாய் வந்துவிட்டதோ என நினைத்து சென்றனர். ஆனால் ஓநாய் அங்கு வரவில்லை, கிராமவாசிகள் சிறுவனை மீண்டும் கண்டித்து விட்டு சென்றனர். சிறுவனும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான். சற்றும் எதிர்பாராமல் ஓநாய் அங்கு வந்துவிட்டது. சிறுவனும் பயந்து போய் “ஓநாய்! தயவுசெய்து உதவுங்கள்! ஓநாய் ஆடுகளைத் துரத்துகிறது. உதவுங்கள்!” என்று கத்த, இந்த முறை அவனுக்கு உதவ யாரும் வரவில்லை.

அந்தி சாய சிறுவன் வீட்டுக்கு வராததை கண்ட கிராமவாசிகள் அவனைத் தேடி மலைக்குச் சென்றனர். சிறுவன் அங்கு அழுது கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் அவன் அருகே சென்றனர. சிறுவன் கிராமவாசிகளிடம் ஓநாய் வந்தது என்று கத்திய போது ஏன் யாரும் வரவில்லை என்று கோபத்துடன் கேட்டான். “இப்போது பாருங்கள், ஆடுகள் அனைத்தும் இல்லை”, என்று கூறினான்.

ஒரு கிராமவாசி சிறுவனை அணுகி, “மக்கள் உண்மையைச் சொல்லும்போது கூட பொய்யர்களை நம்ப மாட்டார்கள். இப்போது வீட்டிற்கு செல்லலாம”, என்று கூறினார்.

நீதி : பொய் நம்பிக்கையை உடைக்கிறது, பொய் கூறுபவர் உண்மையைச் சொல்லும் போது யாரும் நம்பமாட்டார்கள்.

The boy who cried wolf

Once upon a time, there lived a shepherd boy in a village. While he was watching his flock of sheep in the hill, he thought of playing the villagers. Immediately he shouted, “Wolf! Wolf! The sheep are being chased by the wolf!”. The villagers came running to help the boy and save the sheep. They found nothing and the boy just laughed by looking at their angry faces. The villagers understand the game played by the boy and left him.

After a while he started to shout again. The villagers thinking and left if the wolf had actually arrived. But the wolf did not get there, and the villagers again reprimanded the boy and left. The boy continued watching the work. After a while, he saw a real wolf and cried loudly, “Wolf! Please help! The wolf is chasing the sheep. Help!” But this time, no one turned up to help.

By evening, when the boy didn’t return home, the villagers wondered what happened to him and went up the hill. The boy sat on the hill weeping. “Why didn’t you come when I called out that there was a wolf?”, he asked angrily. The flock is scattered now, he said.

A villager approached him and said, People won’t believe liars even when they tell the truth. Let’s go home now.

Moral: Lying breaks trust. Nobody trusts a liar, even when he is telling the truth.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment