துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த அக்.30ல் தொடங்கியது. இக்கண்காட்சியானது வரும் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஆசியா ,ஐரோப்பிய, அரபு நாடுகள் என 78 நாடுகளின் கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒரே இடத்தில் எல்லா நாடுகளின் உணவு பழக்க வழக்கங்கள், புகழ்பெற்ற ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணிலடங்கா பொருட்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வாங்கவும் இயலும். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உயரமான துபாய் புர்ஜ் கலீபா மாதிரி கட்டிடம் மற்றும் பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான நுற்றுக்கணக்கான விளையாட்டு சாதனங்கள், வீடியோ கேம்ஸ்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 50 லட்சத்திற்கும் மேல் மக்கள் பங்கேற்கின்றனர். பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது. 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை தண்ணீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் படகில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விற்கப்படுகிறது.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




