Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தந்தைக்கு வைத்த குறியில் பரிதாபமாக பலியான மகள்

நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி(Yoweri Museveni) தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா(Katumba Wamala). இவர் ஒரு முன்னாள் ராணுவ தளபதி ஆவார். 64 வயதாகும் இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில், ராணுவ பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், அமைச்சர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தன்னுடைய மகள் நாந்தோங்கோவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். . நாந்தோங்கோ அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டே வந்தபோது திடீரென அவர்கள் கார் மீது சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் . துப்பாக்கி குண்டுகள் அப்பா, மகளுடன் சேர்த்து டிரைவர் மீதும் பாய்ந்ததில் மகளும், டிரைவரும் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்.

அமைச்சர் கட்டும்பா வாமலா உடம்பெல்லாம் காயங்களுடன் உயிர் தப்பி தப்பி நிலையில் , அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அமைச்சருக்கு குறி வைத்து இந்த கொலைகள் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை என கூறப்படும் நிலையில், அமைச்சரை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டமை அந்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment