இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழர்களுடன் மோத வேண்டிய தேவையில்லை: பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு மாகாணமே யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. முழுமையான அழிவை எதிர்கொண்டது. ஆனால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயிரிழப்புகள் சம்பவித்தன. எமது ஜனாதிபதியொருவர் உயிரிழந்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். எமது கட்சியில் பலர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்தமையினாலேயே நான் தலைமைத்துவத்திற்கு வந்தேன்.

அது கடந்த காலம். எனவே, தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் எனக்கில்லை. ஐ.தே.க.வினர் மாத்திரமின்றி தமிழ் தலைமைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். அனைவரும் யுத்தத்தினால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, கடந்த காலத்தை மறந்து நாம் பயணிக்க வேண்டும்.

அதற்கமைய உண்மையை பேசி, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே, இதனை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எந்நாளும் கடனாளிகளாக விளங்க முடியாது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். வடக்கை சீர்க்குலைக்க முடியாது. அதற்கு நல்லணிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமின்றி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வோம்.

வடக்கை அபிவிருத்தி செய்யும் சவாலுடன், தெற்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவது போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வோம். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன்மூலம், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள் இலங்கையை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment