இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதுஷ், அவரது சகாக்களின் இலங்கை வீடுகள் மற்றும் உறவினர்களை தேடி

மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை!

வலைவீசி வருகின்றது.

மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்புக்கள் கூடுதலாக எம்பிலிபிட்டிய – உடவளவ பகுதிகளுக்கே வந்துள்ளன. அப்படி வந்த தொலைபேசி இலக்கங்களுக்கு சொந்தமான 15 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

மதுஷ் இந்தியாவுக்கு சென்றே டுபாய் சென்றார். அப்படி இந்தியாவுக்கு அவரை அழைத்து சென்ற நீர்கொழும்பு கொச்சிக்கடை சிவாவை அதிரடிப்படை தேட ஆரம்பித்துள்ளது.

அவர் அரசியல்வாதி ஒருவரின் கீழ் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று கருதும் பொலிஸ் அது தொடர்பிலும் தீவிர விசாரணை நடத்துகிறது.

பாதாள உலக முக்கிய புள்ளி பெரோஸின் சகா எனக் கருதப்படும் சிவா பெரோஸ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் மதுஸுடன் இணைந்துள்ளார்.

அதேபோல் மாளிகாவத்தை கொலன்னாவ மருதானை ஆகிய இடங்களில் கஞ்சிப்பான இம்ரானின்

கொழும்பு வீடு அவரின் மனைவி, தாயாரின் வீடுகள் ,அவரின் இரு சகோதரிகளின் வீடுகள் மற்றும் பாஸ் பைசர் என்பவரின் வீடுகள் பொலிஸ் சோதனைக்குள்ளாகியுள்ளன.

டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சிப்பான இம்ரானின் சகோதரியின் மகன்கள் இருவரும் அடங்குவதால் இந்த வீடுகள் சோதனையிடப்பட்டன.

முழுநாளும் தேடுதல் நடத்தப்பட்டாலும் சந்தேகத்துக்குரிய எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இந்த உறவினர்களுடன் தொலைபேசியில் பேச டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கு சிறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக அவர்களுக்கு தங்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நிலைமறந்து பேசிய பலர் இலங்கையில் இருக்கும் சில சகாக்களின் பெயர்களை கூறி அவர்களை பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளனர்.

அந்த தொலைபேசி அழைப்புக்கள் குரல்ப் பதிவு செய்யப்படுள்ளது.

அவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அதில் சொல்லப்பட்ட பெயர்களை வைத்தும் கடந்த சில நாட்களாக இலங்கையில் மதுஷின் சகாக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுஷின் உறவினர்களில் மதுஷின் முதல் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் கொட்டாவயில் வசித்து வருகிறார்.

அவர் ஒரு தாதி. மதுஷ் பிள்ளைகளை விட்டு போன நாள் முதல் இதுவரை அவரிடம் இருந்து எந்த உதவியையும் பெறாமல் பிள்ளைகளை வளர்த்து வருவதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .

மதுஷின் தந்தைவழி உறவினர்கள் நீர்கொழும்பில் உள்ளனர்.அவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஒருகாலத்தில் நீர்கொழும்பை ஆட்டிப்படைத்த மதுசுடன் அங்கு தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

மதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.

அவர் டுபாய் பொலிஸாரால் வரவேற்கப்படுவதாக தெரிவித்து நேற்று மாலை ஊடகங்களில் வெளிவந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மாநாடொன்றில் உரையாற்றவென கலந்துகொள்ள சென்றிருந்த லத்தீப்புக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படமே இது எனத் தெரிய வந்துள்ளது.

அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் டீ ஐ ஜி லத்தீப்பை மனந்தளரச் செய்யும் நோக்கில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊடாக இப்படியான வதந்திகளை பரப்பி வருவதாக அறியப்பட்டுள்ளது.

தற்பொது டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் சகாக்கள் நீண்ட காலம் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சிறுநீர் பரிசோதனை அறிக்கை நாளை ஒரு தகவலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.

இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்றை அனுப்ப ஏற்பாடு செய்திருந்த இருந்த போதும் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை. டுபாய் விசாரணைகள் சீரியஸாக நடப்பதே அதற்கான காரணமாகும்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment