இலங்கை உலகம் செய்திகள் புதிய செய்திகள்

லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த இலங்கையர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

லண்டனில் குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம் திகதி கிழக்கு லண்டனின் Ilford பகுதியில் தனது பிள்ளைகளான 19 மாதங்களான பவின்யா நித்தியகுமார் மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

41 வயதான நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள, இந்நிலையில், ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவரை காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகளின் தாய், இந்த சம்பவத்தின் போது குளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நிஜிஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளை கொலை செய்யும் போது, நித்தியகுமார் மருட்சி கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக மனநல மருத்துவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நித்தியகுமாரின் செயல்களின் விளைவுகள் “பேரழிவு தரும்” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு இளம் மற்றும் அப்பாவி குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தையும், அவர்களது வாழ்க்கையையும் அவர்களது சொந்த தந்தையால் இழந்திருக்கின்றார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment