Featured ஆன்மீகம் இலங்கை கிறிஸ்தவம் செய்திகள் புதிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான இரு அருட்தந்தையர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

குறி்த்த உத்தரவானது கடந்த 01ஆம் திகதி (01.07.2024) பிறப்பிக்கப்பட்டது.

குறித்த ஆயர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி ஆயர் தலைமையில் வணபிதாக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அந்த கலந்துரையாடலை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக அவர்ளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆயர் இல்லத்தினால் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்து அதளை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் என சந்தேகத்தின்பேரில் இரு அருட்தந்தையர்களிற்கு எதிராக கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களான இரு அருட்தந்தையர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டார்.

கத்தோலிக்க திருச்சபையில் தங்களது உள்ளக விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆயர் தலைமையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.

நீண்ட காலமாக உலக நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மரபுகளே பேணப்பட்டு வந்தன.

எனினும்,  வரலாற்றில் முதன் முறையாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இது போன்ற விடயங்களுக்கான முதன்முறையாக அருட்தந்தையர்களை விசாரணைக்குட்படுத்துவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment