Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சு .

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை, தொழில்நுட்பங்களை திருடுவதுடன், நியாயமற்ற பொருளாதார நடைமுறைகளில் ஈடுபடுவதாக சீனா மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பு மோதல்கள் வலுத்து, வர்த்தகப்போர் தொடங்கியது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை விதிக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய தகவல்களை சீனா ஆரம்பத்தில் மறைத்து விட்டது, அதனால் அமெரிக்கா பெரும்பாதிப்புக்குள்ளானது என்று டிரம்ப் கருதினார்.

அதைத்தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மோசம் அடைந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். இது அமெரிக்க- சீன உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்த தருணத்தில், ஜோ பைடன், அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்கை நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார். சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜின் பிங்குக்கும், சீன மக்களுக்கும் ஜோபைடன் முதலில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் சீனாவின் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது சீனா கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் சீன அதிபர் ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தனது கவலையை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவது, உலகளாவிய சுகாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள சவால்கள், பருவநிலை மாற்றம், ஆயுத பெருக்கத்தை தடுத்தல் உள்ளிட்டவை பற்றியும் ஜோ பைடனும், ஜின்பிங்கும் விவாதித்து உள்ளனர்.

மோசமான உறவால் இரு தரப்புக்கும் பேரழிவு ஏற்படும் என்று ஜோ பைடனிடம் ஜின்பிங் எச்சரித்தார் என்று சீன அரசு டெலிவிஷன் கூறியது. இரு தரப்பு உறவுகள், முக்கிய சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஜின்பிங்கும், ஜோ பைடனும் விவாதித்தனர் என்று சீன டெலிவிஷன் தெரிவித்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜோ பைடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், அமெரிக்க மக்களுக்கு பலன் அளிக்கும்போது சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் தெரிவித்தேன் என கூறி உள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை இவ்விரு தலைவர்கள் சந்திப்பு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “சீனாவின் கட்டாயமான, நியாயம் இல்லாத பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறல் போன்றவற்றை ஜனாதிபதி ஜோ பைடன், ஜின்பிங்கிடம் வலியுறுத்தி பேசினார்” என கூறப்பட்டுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment