இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றில் 2 வழக்குகள் கோட்டாவுக்கு எதிராக தாக்கல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது வழக்கை இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அசிம்சா விக்கிரமதுங்க தாக்கல் செய்துள்ளார்.

இரண்டாவது வழக்கை இலங்கையில் சி்த்திரவதையினால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் அசிம்சா விக்கிரமதுங்க தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டாபயவ ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் பல்பொருள் அங்காடி வளாளத்தில் உள்ள Traders Joe’s என்ற வணிக நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டாவிடம் இந்த வழக்குத் தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து மற்றொரு வழக்கை கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளது.

இந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாகவும், கோட்டாவிடம் நேற்றிரவு Traders Joe’s வாகனத் தரிப்பிடத்தில் வைத்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட குறித்த தமிழர், கோட்டாபய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச அடுத்த சில நாட்களில் நாடு திரும்பவிருந்தார். இந்நிலையிலேயே, அவருக்கு எதிராக, இருவேறு சட்ட நிறுவனங்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் என மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment