உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளவரசர் ஹரிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு.

அமெரிக்க அரசியல் சாசனம் குறித்து பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்திருந்த கருத்து ஒன்று அமெரிக்கர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இளவரசர் ஹரி, அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் குறித்து பேசவேண்டியது நிறைய இருக்கிறது, அதைக் குறித்து எனக்கு அதிகம் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால், அது பைத்தியக்காரத்தனமானது என்று கூறினார்.

முதலாம் சட்டத்திருத்தம் தொடங்கிய இடத்துக்கு செல்ல நான் விரும்பவில்லை, ஏனென்றால் அது ஒரு பெரிய விடயம், நான் அமெரிக்கா வந்து கொஞ்சம் காலம்தான் ஆகிறது, அது எனக்குப் புரியவும் இல்லை. ஆனால், எல்லா சட்டங்களிலும் ஓட்டைகள் இருக்கும். ஆகவே, சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று பார்த்து அதைக் கடைப்பிடிப்பதைவிட, அந்த சட்டத்திலிருந்து அந்த ஓட்டையைப் பயன்படுத்தி தப்பப் பார்க்கலாம் என்றார் ஹரி.

ஹரியின் கருத்துக்களால் கொந்தளிப்படைந்த அமெரிக்கர் ஒருவர், அரசியல் சாசனம் தொடர்பாக ஹரிக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமானால், அவர் பிரித்தானியாவுக்கு திரும்பிச் செல்லலம் என்று கூறியுள்ளார்.

மற்றோருவரோ, நேரடியாகவே, அமெரிக்காவை விட்டு வெளியே போ, என்றே கூறிவிட்டார். அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் சட்டத்திருத்தம், அமெரிக்காவில் பல அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கிறது. அவற்றில், மத சுதந்திரம், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம், மக்கள் ஓரிடத்தில் கூடும் சுதந்திரம் மற்றும் அரசின் மீதே பயமின்றி புகாரளிக்கும் உரிமை ஆகியவற்றை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பிரித்தானியாவில் இது குறித்து Nigel Farage ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னும் கொஞ்ச காலத்தில் ஹரி இரண்டு நாடுகளுக்குமே வேண்டாதவர் ஆகிவிடப்போகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent posts

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் “நவி” பிள்ளை (Navanethem “Navi” Pillay) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது....
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சன் (Anne Carson) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கனடாவைச் சேர்ந்த இரண்டாவது இலக்கிய நோபல்...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி பி. ககன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி கென்சோ சோய் (Kenso...
Thamil Paarvai

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம்-அமெரிக்க துகள் இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சன் (Francis Halzen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியை...
Thamil Paarvai

உடலியல் அல்லது மருத்துவம் 2026 ஆம் ஆண்டு நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமெரிக்காவின் கார்ல் டெய்செரோத் (Karl Deisseroth), ஜெர்மனியின் பீட்டர் ஹெகெமன் (Peter...
Thamil Paarvai

கனடிய பொறியாளர்கள் உருவாக்கிய சொந்த EV

கனடா தனது சொந்த மின்சார வாகனத்தை (EV) உருவாக்கிவிட்டது. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு சாதாரண கார் அல்ல – இது எதிர்காலத்தின் வாகனம்!...
Thamil Paarvai

கனடாவின் வட்டி விகிதம்

அடுத்த நடவடிக்கை உயர்வா? ஒரு ஆழமான பார்வை கனடாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடா, கடந்த 2025 அக்டோபர் முதல் தனது கொள்கை வட்டி விகிதத்தை...
Thamil Paarvai

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணமான இரு முக்கிய புள்ளிகள்

தியாக தீபம் திலீபன் எனும் பெயர் தமிழ் மக்களின் உள்ளங்களில் அகிம்சைப் போராட்டத்தின் உச்ச அடையாளமாகப் பதிந்துள்ளது. 1987ஆம் ஆண்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம்...
Thamil Paarvai

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

டொராண்டோ நகர முதல்வர் தேர்தல் அக்டோபர் 26, 2026 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய முதல்வர் ஒலிவியா சௌ, நகரசபை உறுப்பினர் பிராட் பிராட்போர்ட், முன்னாள் மத்திய அமைச்சர்...
Thamil Paarvai

Leave a Comment