Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

இஸ்லாமிய குடும்பம் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியாகியுள்ள சமீபத்தைய தகவல்கள்

கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று தங்கள் மத நம்பிக்கைக்காக கொலப்பட்ட சம்பவம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.

வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தற்போது, சிறுவன் Afzal மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்றாலும், அவன் முழுமையாக குணமாக இன்னும் கொஞ்சம் காலமாகும் என அவனது உறவினரான Saboor Khan என்பவர் தெரிவித்துள்ளார். அவன் தன் உறவினர்களுடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் Khan தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளியான Nathaniel மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகளும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது, அவர் மீது இரண்டு தீவிரவாதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment