ஆரோக்கியம் இயற்கை அழகு

உங்கள் வாழ்க்கையில் இதை கவனிப்பது உண்டா….

இந்த அவசர உலகத்தில் பலரும் தங்கள் உடல்நலத்தில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மட்டுமே உடல்நலத்தில் அக்கறை கொள்கிறார்கள். இது தவறான செயல். உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழமுடியும். இன்று உடல்நலத்தைச் சீராக வைத்துக்கொள்வதற்கான சில எளிய பயிற்சியை பற்றிப் பார்ப்போம்.

ஸ்விங்கிங் (Swinging) :

👉 இரண்டு கால்களுக்கு இடையே சிறிதளவு இடைவெளி விட்டு நிற்கவேண்டும். பிறகு குதிகாலை லேசாகத் தூக்கி, கடிகாரத்தின் பெண்டுலம் போல வலப்பக்கமும் இடப்பக்கமும் தொடர்ந்து அசைக்கவும்.

இந்தப் பயிற்சியை செய்யும் போது இடுப்பை வளைக்கக் கூடாது. அசைக்கும் போது எதிர்ப்பக்கம் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

நீங்கள் அசைக்காமல் அந்தப் பொருள் அசைவது போல தோன்றும். பிறகு, கண்களை ரிலாக்ஸாக மூடிக்கொண்டு, மீண்டும் அசைக்கவும். ஏற்கனவே பார்த்த அந்த பொருளை நினைத்துப் பார்க்கவும்.

பின்னர் கண்களை வட்டமாக சுழற்றுங்கள். பிறகு மீண்டும் அதற்கு நேர்மாறான திசையில் வட்டமாகச் சுழற்றுங்கள். தினந்தோறும் இந்தப் பயிற்சியை நான்கு முறை செய்ய வேண்டும்.

முதலில் நேராக நின்றுகொள்ளுங்கள். பின் முகத்தைத் திருப்பாமல், இரு கண்களையும் முதலில் வலது புறமாகத் திருப்பவும். பின்னர் இடதுபுறமாகத் திருப்பவும். இந்தப் பயிற்சியை ஆறு முறை செய்ய வேண்டும்.

கண் பார்வைக்கானப் பயிற்சிகள் :

👉 ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 20- 25 தடவை கண்களை சிமிட்டவும். சீரான இடைவேளையில் கண் சிமிட்டினால் பார்வை தௌpவாகும். கண் அயர்வு நீங்கும்.

Woman eye with a curl false eyelashes – low angle view

தினந்தோறும் மூன்று முறை குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். பின்னர் கைகளில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, கண்ணிற்கு இரண்டு அங்குல தொலைவில் கைகளை வைத்து, தண்ணீரைத் தௌpக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 முறை செய்ய வேண்டும்.

பால்மிங் (Palming):

👉 ஒரு நாற்காலியில் கையின் முட்டி தொடையில் படுமாறு உட்கார வேண்டும்.

👉 பின்னர் வலது கையால் வலது கண்ணையும், இடது கையால் இடது கண்ணையும் மூடிக்கொண்டு, மனதிற்கு சந்தோஷம் தரும் பழைய நினைவுகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.

👉 இந்தப் பயிற்சியை தினந்தோறும் 10 நிமிடங்கள் என மூன்றுமுறை செய்ய வேண்டும்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment