உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி சிறந்த ஆசிரியருக்கான சர்வதேச விருதை வென்றார்!

துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5-வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெற்றது. இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார். சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார். இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார். ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம் என சர்வதேச அளவில் விருது வென்றது குறித்து பீட்டர் தெரிவித்தார். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல எனவும், எனது நாட்டின் மாணவர்களுக்கானது என கூறினார். என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன் என தெரிவித்தார். இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் கூறினார். சர்வதேச அளவில் 10 இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது என கூறினார். விருது பெற்ற ஆசிரியரை கென்யா பிரதமர் உகுரு கென்யட்டா பாராட்டியுள்ளார். ‘உங்கள் சாதனை சரித்திரம், ஆப்பிரிக்காவின் சரித்திரமாகும். இளம் சாதனையாளர்களால் இந்த நாடு முன்னேறும்’ என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment