Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சர்வதேச உளவுத் துறைகள் அலறுகின்றன.

வீழ்ந்த சிம்ம சொப்பனம் கமேனி.. ஈரான் கையில் உள்ள அந்த ‘டர்ட்டி பாம்’.. இனி நடக்க போகும் பேரழிவு!

எங்கள் தலைவரைத் தொட்டுவிட்டீர்கள்… இனி உங்கள் நகரங்களில் நிம்மதி இருக்காது!” – இது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-யிடமிருந்து கசிந்திருக்கும் ரகசிய எச்சரிக்கை.

கமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரான் தனது ‘கடைசி ஆயுதத்தை’ கையில் எடுக்கப்போவதாக சர்வதேச உளவுத் துறைகள் அலறுகின்றன. அதுதான் அந்தப் பயங்கரமான ‘டர்ட்டி பாம்’ (Dirty Bomb)!

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே ரகசிய ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்று (பிப்ரவரி 28), டெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரு அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின.

‘பங்கர்-பஸ்டர்’ (Bunker-buster) ரக ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனி தங்கியிருந்த தரைக்கடி சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் கமேனி மட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்தே ஈரான் ‘டர்ட்டி பாம்’ (Dirty Bomb) பயன்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

என்ன இந்த ‘டர்ட்டி பாம்’?

இது ஒன்றும் சாதாரண அணுகுண்டு (Atomic Bomb) கிடையாது. அணுகுண்டு என்பது ஒரு நகரத்தையே சில நொடிகளில் தரைமட்டமாக்கி, லட்சக்கணக்கானவர்களை எரித்துவிடும். ஆனால், ‘டர்ட்டி பாம்’ என்பது ஒரு ‘மெதுவான மரணம்’.

இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது, ஆனால் விளைவு கொடூரமானது:

சாதாரண வெடிமருந்துகளுடன் (Dynamite), கதிரியக்கப் பொருட்களை (Radioactive materials like Caesium-137 or Cobalt-60) சேர்த்து இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிக்கும்போது, பெரிய கட்டிடங்கள் இடியாது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத கதிரியக்கத் துகள்கள் (Radioactive dust) காற்றில் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பரவும்.

அதைப் சுவாசிக்கும் மக்கள், புற்றுநோய் முதல் மரபணு பாதிப்பு வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மெல்ல மெல்ல மடிவார்கள். அந்தப் பகுதி பல தசாப்தங்களுக்கு மனிதர்கள் வாழத் தகுதியற்ற ‘பேய் நகரமாக’ (Ghost Town) மாறிவிடும்.

ஈரான் ஏன் இதைப் பயன்படுத்த நினைக்கிறது?

ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அமெரிக்கத் தாக்குதலில் சேதமடைந்திருக்கலாம். முழுமையான அணு ஆயுதத்தை ஏவும் வசதி இப்போது ஈரானிடம் இல்லை என்றாலும், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள கதிரியக்கக் கழிவுகளை வைத்து இந்த ‘டர்ட்டி பாம்’-களை மிக எளிதாக உருவாக்க முடியும்.

நிழல் போர்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் அல்லது டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் ஒரு சிறிய ‘டர்ட்டி பாம்’ வெடித்தால் கூட, அந்தப் பொருளாதார மையங்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு முடக்கப்படும்.

மக்களிடையே பீதி: உயிரிழப்புகளை விட, ‘கதிரியக்கம் பரவிவிட்டது’ என்ற பயமே அந்த நாட்டை நிலைகுலையச் செய்துவிடும். இதுதான் ஈரானின் ‘சைக்காலஜிக்கல் வார்ஃபேர்’ (Psychological Warfare).

உலகப்போர் 3-க்கான ‘சிக்னல்’?

“ஈரான் இந்த டர்ட்டி பாமை ஒருமுறை பயன்படுத்தினாலும் போதும்… அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது முழுமையான அணு ஆயுதங்களை (Nuclear Arsenal) ஏவும்!” என எச்சரிக்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். அப்படி நடந்தால், அது ஒரு பிராந்தியப் போராக இருக்காது; ஒட்டுமொத்த பூமியின் அழிவுக்கான தொடக்கமாக இருக்கும்.

தற்போது வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் ரகசியக் கிடங்குகளில் இருந்து ஏவுகணைகள் நகர்த்தப்படுவதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அந்த ஏவுகணைகளின் தலையில் இருப்பது சாதாரண வெடிமருந்தா அல்லது இந்த ‘அழுக்கு குண்டா’? என்பதுதான் இப்போதைய மர்மம்!

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் “டொலர்” என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது.

இன்று ஈரானிற்கு மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தத்திற்கான பிரதான காரணம் உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் ‘பெற்றோ-டாலர்’ (Petrodollar) அமைப்பைக் காப்பதற்கான ஒரு சட்டத்துக்கு விரோதமான ஒரு சதுரங்க வேட்டை என்பதே உண்மை.

1970-களின் தொடக்கத்தில், ஹென்றி கிஸிஞ்சர் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழு சவூதி அரேபியாவுடன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தைச் செய்தது.

அதில் சவூதி தனது எண்ணெயை அமெரிக்க டாலரில் மட்டுமே விற்க வேண்டும்; பதிலுக்கு சவூதி ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் என்பதே.

இதன் விளைவாக, உலக நாடுகள் எண்ணெய் வாங்க வேண்டுமானால் டொலரைச் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இது அமெரிக்காவுக்குத் தன்னிச்சையாகப் பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தையும், உலகப் பொருளாதாரத்தைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் வலிமையையும் வழங்கியது.

யாரெல்லாம் டாலரின் இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அமெரிக்காவால் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டனர்:

சதாம் உசேன் டாலருக்குப் பதிலாக யூரோவில் (Euro) எண்ணெய் விற்க முயன்றார். விளைவு: ‘அணு ஆயுதப் பொய்’ கூறி ஈராக் அழிக்கப்பட்டது. சதாம் தூக்கிலடப்பட்டார்.

முஅம்மர் கடாபி ‘தங்கத் தினார்’ (Gold-backed Dinar) என்ற ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்க முயன்றார். விளைவு: நேட்டோ படைகளால் கொல்லப்பட்டார்.

நிக்கோலஸ் மதுரோ: சமீபத்தில் (ஜனவரி 2026), அமெரிக்கா “Operation Absolute Resolve” என்ற பெயரில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, மதுரோவைக் கைது செய்துள்ளது. இது ‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் 300 பில்லியன் பரல் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதும் டொலரின் சரிவைத் தடுப்பதும் மட்டுமே.

இந்த வரிசையில் அமெரிக்காவின் மிக முக்கிய இலக்காக இப்போது இருப்பது ஈரான் மற்றும் அதன் உச்சத் தலைவர் அலி கமேனி. அமெரிக்காவின் ‘Pattern’ படி, ஒரு நாட்டை அழிக்கும் முன்பு அதன் தலைவரை ‘சர்வாதிகாரி’ எனச் சித்தரித்து கொல்வது.

அப்படியே அணு ஆயுத பொய் ஒன்றுடன் அலி கொமேனியும் நேற்று கொல்லப்பட்டார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment