ஆன்மீகம் கிறிஸ்தவம்

தச்சனுக்குத் தெரியுமா?

தச்சனுக்குத் தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?’ – இயேசு பேதுருவின் படகை ஆழத்திற்குக் கொண்டுபோய் வலைகளைப் போடச் சொன்னபோது பேதுருவின் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்திருக்கும். ‘ஆயினும் உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று பேதுரு வலைகளை வீசுகின்றார். வலை கிழியுமட்டும், இரு படகுகள் மூழ்கும் மட்டும் மீன்கள் கிடைத்தன. பேதுரு தன்னுடைய தவற்றை உணர்ந்தவராய், ‘ஆண்டவரே, நீர் என்னை விட்டுப் போய்விடும்’ என்று இயேசுவிடம் இறைஞ்சுகின்றார்.

மூன்று விடயங்கள் இங்கே முக்கியமானவை:

அ. தயக்கம்

‘இது அப்படி நடக்குமா?’ ‘நினைத்த நேரத்தில் பணம் கிடைக்குமா?’ ‘பொருளாதார நிலை சரியாகுமா?’ ‘இந்தப் பிரச்சினை சரியாகுமா?’ ‘நான் நாளை நலமாகி விடுவேனா?’ – இப்படி நிறைய தயக்கங்கள் நம்மிடம் எழுவதுண்டு. மேலும், நாம் தவறிவிட்டால், அல்லது ஏதாவது பிரச்சினையாகிவிட்டால் அதன் எதிர்விளைவையும், மற்றவர்களின் கேலிப் பேச்சையும் எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வியும் நம்மிடம் எழுவதுண்டு. நாம் முன்னேறிச் செல்வதற்கு தயக்கம் பெரிய தடையாக இருக்கின்றது. அதிலும், அவசரமான நேரங்களில் நாம் காட்டும் தயக்கம் ஆபத்தாகிவிடுவதும் உண்டு. சில நேரங்களில் பணம் மற்றும் மற்ற தேவைகளின் காரணமாகவும் நாம் தயக்கம் காட்ட நேரிடும். பேதுருவுக்கு ஏற்பட்டிருக்கிற தயக்கம் இயேசுவின் வார்த்தைகளை நம்புவதில் இருக்கிறது. பேதுரு பிறப்பிலேயே மீன்பிடித் தொழில் செய்கின்றவர். தண்ணீரின் ஆழம், ஓட்டம், மீன்களின் இருப்பு, வகை அனைத்தையும் அறிந்தவர். ஆகையால்தான், அந்தத் தொழிலே தெரியாத ஒருவர் மீன்பிடி பற்றிச் சொன்னபோது தயக்கம் காட்டுகிறார். பேதுரு தன்னுடைய மூளையால் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவருடைய மனம் செயலாற்றுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.

ஆ. என்னைவிட்டுப் போய்விடும்

இயேசுவை அவருடைய வாழ்வில் மூன்று பேர் தங்களைவிட்டு அகலுமாறு கூறுகிறார்கள். ஏரோது குழந்தையாக இருந்த இயேசுவை உலகைவிட்டே அகலச் செய்ய முயலுகின்றார். கெரசெனேர் மக்கள் தங்கள் பன்றிகள் கடலுக்குள் வீழ்ந்து இறந்தவுடன் இயேசுவை அகலச் சொல்கின்றனர். இங்கே பேதுரு இயேசுவை அகலச் செய்கின்றார். இந்த மூன்று இடங்களிலும் இயேசுவின் பிரசன்னம் அவர்களின் வலுவின்மையை சுட்டிக்காட்டுகிறது. அந்த வலுவின்மையை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வலுவின்மை சுட்டிக்காட்டப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர்.

இ. அனைத்தையும் விட்டுவிட்டு

‘ஆண்டவரே, இன்றைக்கு இரண்டு படகுகள் மீன் பிடித்தாயிற்று. இப்படியே ஒவ்வொரு நாளும் பிடித்தால் நாம் ரொம்ப பணக்காரர் ஆகிவிடலாம்!’ – ‘இன்னும் கொஞ்சம்,’ ‘இன்னும் கொஞ்சம்,’ ‘இன்னும் கொஞ்சம்’ என்ற கார்ப்பரெட் எண்ணம் பேதுருவுக்கு அளவே இல்லை. இயேசுவை ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக பேதுரு பார்க்கவில்லை. அனைத்தையும் பெற்றவர் அனைத்தையும் இழக்கத் துணிகின்றார். ஆக, இழப்பதில்தான் வாழ்க்கை என்பதை பேதுரு உடனே அறிந்துகொள்கின்றார். மீன்களை விட்டுவிட்டு ஆண்டவரைப் பற்றிக்கொள்வதே சிறந்தது என்னும் ஞானத்தை பேதுரு நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்கின்றார்.

பவுல் ஏறக்குறைய இதே கருத்தை, ‘நீங்கள் கடவுளைப் பற்றிய அறிவில் வளர வேண்டும்’ என்று அறிவுறுத்துகின்றார். கடவுளைப் பற்றிய அறிவு வந்தவுடன் அவருடைய வல்லமை நம்மை நிரப்பிவிடுகிறது. ஆக, இவ்வறிவு வெறும் மூளை அறிவு அல்ல. மாறாக, வாழ்க்கையையே புரட்டிப் போடும் அறிவாக இருக்கின்றது.

Recent posts

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

புதிய மோசேயின் பிரகடனம்

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு நற்செய்தி ஆகும். திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே, இந்த நற்செய்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும்...
Thamil Paarvai

பூமியில் வாழும் விண்ணின் அரசியலமைப்பு

உலக வரலாற்றில், ஒரு மனிதரின் சொற்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் விசாரணை, கன்பூசியஸின் ஒழுக்கம், புத்தரின் இரக்கம் – இவை அனைத்தும்...
Thamil Paarvai

Leave a Comment