கிரிக்கெட் விளையாட்டு

தடை நீக்கம்….ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம் | மார்ச் 15, 2019

ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது. மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க பி.சி.சி.ஐ.இக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டேலா, சவான் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ., மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடுத்தார்.

நேற்று, இதற்கான தீர்ப்பை நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அளித்தனர். அதில்,‘ ஸ்ரீசாந்திற்கு அளிக்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகமான தண்டனை. இதை நீக்க வேண்டும். இது குறித்து அடுத்த மூன்று மாதத்திற்குள் பி.சி.சி.ஐ., ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுக்க வேண்டும்,’ எனஇ தெரிவித்தனர்.

பயஸ் வழியில்…

ஸ்ரீசாந்த் கூறுகையில்,‘‘ நான் கிரிக்கெட் விளையாடி ஆறு ஆண்டு ஆகிவிட்டன. தற்போது, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு பி.சி.சி.ஐ., மதிப்பு வழங்கும் என நம்புகிறேன். மீண்டும் கிரிக்கெட் களத்தில் பங்கேற்பேன். இனி எங்கு விளையாட விரும்புகிறேனோ, அந்த இடத்தில் விளையாட முடியும். இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் கோப்பை வென்றார். எனக்கு 36 வயதுதான் ஆகிறது. இன்னும் விளையாட வேண்டிய காலம் அதிகமாக உள்ளது. ஸ்காட்லாந்தில் மீண்டும் கிளப் அணிக்காக பங்கேற்க விரும்புகிறேன்,’’ என்றார்.

பி.சி.சி.ஐ., முடிவு என்ன

பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘ சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. இதன்பின், ஸ்ரீசாந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்,’’ என்றார். வீரர்களுக்கான ஊக்கமருந்து சோதனை திட்டம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் வரும் 18ல் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் ஸ்ரீசாந்த் தீர்ப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

Leave a Comment