நெதர்லாந்தில் சென்று கொண்டிருந்த டிராம் ரயிலில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரின் 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, டிராமில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அந்த வாகனாமனது இணைப்பின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜோஸ்ட் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஜோஸ்ட் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகரம் முழுவதும் டிராம் ரயில் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
next post
Recent posts
2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19
2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்
2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்
தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்
IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை
ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...




