Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சம்மேளனம்

முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிக்கார இதனை அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கமும் தமது போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது, கிராம சேவையாளர்கள் இரவும் பகலும் சிறப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது கிராம சேவையாளர் ஒருவரும் கோவிட் தொற்றினால் மரணமானார். மேலும் பல அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு தமக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை என்று சுமித் கொடிக்கார குறிப்பிட்டார்.

இருப்பினும், பெரும்பாலான அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ,அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனமும் இந்த விடயத்தில் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது.

எனவே, நாடு முழுவதும் மொத்தம் 12,000 கிராம சேவையாளர்கள்; தங்களது அனைத்து கடமைகளிலிருந்தும் விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாக கிராம சேவையாளர் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மோசமான நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment