ஆரோக்கியம் புதிய செய்திகள் பொது மருத்துவம்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி

வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். எந்த பிரச்சனைக்கு செம்பருத்தியை எப்படி சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். 
செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும். 
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். 

செம்பருத்தி பூ குளிர்ச்சியானது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும். பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் பேன்கள் குறையும். 
10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். 
கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள். பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். 
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

2 comments

Kannan Rajendran December 1, 2020 at 9:56 am

The article is really good

Reply
Kannan Rajendran December 1, 2020 at 9:57 am

Thanks for your support

Reply

Leave a Comment