இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி உரை : வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும்

இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடிஇ ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம் என்றும் பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராணுவ வீரர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் நாடு இந்தியா என்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை முறியடிக்க எந்த சக்தி வந்தாலும் அதை நாம் முறியடிப்போம் என்று கூறினார்.தேசிய போர் நினைவகம்: சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் 25இ942 வீரர்களின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ராணுவத்தின் 4 விதமான முக்கியத்துவங்களை குறிக்கும் வகையில் மைய மண்டபம் 4 சக்கரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சக்கரத்தின் மீது 15.5 மீட்டர் உயரத்தில் அணையா விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டை தொடர்ந்து தலைநகரில் இரண்டாவது அணையா விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய போர் நினைவகத்தைச் சுற்றி பல்வேறு போர் திறன்களை குறிக்கும் வகையில் 600 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட 6 வெண்கல சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் நினைவு சின்னங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக ரக்ஷா சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று புறம் சூழப்பட்ட இதில் 600-க்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. சுவர் போல் நின்று நாட்டை காக்கும் வீரர்களை குறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ நிகழ்ச்சிகள் அனைத்தும் இனி இந்த நினைவுச் சின்னத்திலேயே நடத்தப்படும் என்றும் மறைந்த வீரர்களுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் வீரர்களுடன் கலந்துரையாடும் வகையிலும் விரைவில் வசதி செய்யப்பட உள்ளது. தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அதே சமயம் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் முகாம் திரும்புதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment