உலகம் செய்திகள் புதிய செய்திகள்

முதல்முறையாக சந்திரனில் ஆய்வு நடத்த விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!

சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன.

அவற்றில் சீனா கடந்த ஜனவரி 3ம் தேதி சந்திரனின் பின்புறத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வரும் 22ம் தேதி மதியம் 1.45 மணிக்கு, பெரிஷீட் எனப்படும் 585 கிலோ எடை கொண்ட விண்கலம் அனுப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேல் விண்வெளி நிறுவன தலைவர் மோரிஸ்கான்இ சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புவதால் எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்று கூறியுள்ளார். நாசாவுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்பு உள்ளதாகவும்இ இந்த விண்கலத்தில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்றும் தகவல் அளித்துள்ளார்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment