ஆன்மீகம் இந்து சமயம்

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூச திருநாள்.

🦚 பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப்பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள்.

🦚 முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசத் தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன், சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

🦚 மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிந்தார். சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். ஆகவே இந்த தைப்பூசத் திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

வேலுக்கு பூஜை… வேலவனுக்கு ஆராதனை!

🦚 தைப்பூசத் திருநாளில், வேல் பூஜை செய்வதும், வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும், வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது.

🦚 இந்த நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும், இல்லத்தில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும், அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தைப் போக்கி அருளும். சந்தோஷத்தைப் பெருக்கித் தரும்.

🦚 தைப்பூச நன்னாளில், முருகக்கடவுளுக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை பாராயணம் செய்வதும் எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கித் தரும். எதிரிகளை பலமிழக்க செய்யும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும்.

🦚 தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.

தைப்பூசம் :

🦚 பௌர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

🦚 இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

🦚 தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

🦚 தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

🦚 தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், அதிலிருந்து உலகும், உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

Recent posts

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

புதிய மோசேயின் பிரகடனம்

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு நற்செய்தி ஆகும். திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே, இந்த நற்செய்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும்...
Thamil Paarvai

பூமியில் வாழும் விண்ணின் அரசியலமைப்பு

உலக வரலாற்றில், ஒரு மனிதரின் சொற்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் விசாரணை, கன்பூசியஸின் ஒழுக்கம், புத்தரின் இரக்கம் – இவை அனைத்தும்...
Thamil Paarvai

Leave a Comment