சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய மீன்கள் இருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு மீனவர், “இங்கே பாருங்கள்! இந்த குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன! இப்போது மாலை நேரம் ஆகிவிட்டது. நாம் நாளை காலை வந்து அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும்” என்று சொன்னார்.

மீனவர் சொன்னதை கேட்ட, மூன்று மீன்களில் ஒரு புத்திசாலி மீன், மற்ற இரண்டு மீன்களையும் அழைத்து, “மீனவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? இன்றிரவு இந்த குளத்தில் இருந்து வெளியேறி, விரைவாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்”, என்று சொன்னது.

இரண்டாவது மீன் அதனை ஏற்றுக்கொண்டு, “நாம் இனி இங்கே இருக்க வேண்டாம்” என்று சொன்னது. ஆனால் மூன்றாவது மீன் மற்ற இரு மீன்களும் சொன்னதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தது. “இது தான் நம்முடைய வாழ்விடம், நாம் இங்கிருந்து வேறு எங்கும் ஓடக்கூடாது”, என்றது.

மூன்றாவது மீனை சமாதானப்படுத்த முடியாமல், மற்ற இரு மீன்களும் அந்தக் குளத்தில் இருந்து அன்றிரவே வெளியேறின. அடுத்த நாள், மீனவர்கள் அந்த குளத்தில் ஒரு பெரிய வலையை விரித்து நிறைய மீன்களை பிடித்தனர். மூன்றாவது மீன் மற்ற மீன்கள் சொன்னதை கேட்டிருந்தால், அது அப்படி பிடிபட்டிருக்காது.

நீதி: சிந்தித்து, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும்.

Act Wisely

Three fish were very close friends in a village pond. One day, some fishermen passing through that pond saw plenty of fishes. One of the fisherman said, “hey look here, so many fishes in this pond! It is already evening now. We should come tomorrow morning and catch them all”.

Hearing the fisherman, one of the three fishes, who was the wisest of them all called the other two fishes and said, “Did you hear what the fisherman said? We should leave this pond tonight itself, and move to a safe place quickly”.

The second fish agreed to him and said, “I think we should not be here anymore”. But the third fish started laughing for what both fishes said. It replied, “This is our home. We should not run away like this”.

Unable to convince the third fish, the other two left the pond that night. The next day, the fishermen put a big net in that pond and caught a plenty of fishes. Third fish was one among them. If it had listened to other two fishes, it wouldn’t have been caught like that.

Moral : Think and act wisely to avoid problem.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment