சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும்.

எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம் கேட்டது. தவளை அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. ஒரு நாள், தவளை கயிற்றின் ஒரு முனையை தன் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டு மற்றொரு முனையை எலியின் கால்களில் கட்டியது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று, இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக எலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய எலி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம் தண்ணீரின் மீது எலி மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது.

நீதி: நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.

Whose fault?

A mouse and a frog were friends. Every morning the frog would hop out of his pond and go to visit his friend.

Mouse asked frog to teach swimming to it. Frog accept its request. One day the frog tied one end of a string around its own leg, tied the other end to the mouse leg.

Then the eagle which was flying over looked at them and came to attack them. Frog immediately fell into the water with the mouse to save its life. The mouse which drowned in water was dead. While its body was floating above, its legs were tied along with the frog.

At that time, the eagle saw the mouse floating on the water and came down to pick the mouse and flied over. Even the frogs tied together with the frog was also clutched by the eagle.

Moral: We should think their worth before we select someone as friend.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment