Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வெற்றி பெற்ற பின் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து செங்கலைக் கொடுத்தது எதற்காக தெரியுமா?

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், தன் தந்தை ஸ்டாலினை சந்தித்த உதய நிதி ஸ்டாலின் அவருக் செங்கலை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

பிற்பகல் 3.50 மணி நிலவரப்டி திமுக கூட்டணி திமுக 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கிள்ளியூர், விளாத்திகுளம், சேப்பாக்கம், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக கூட்டணி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வால்பாறை, பவானிசாகர் தொகுதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பம் முதலே மிகப்பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து அவர் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவரும், தந்தையுமான ஸ்டாலினை சந்தித்து AIIMS என்று எழுதிய செங்கலை கொடுத்தார்.

ஏனெனில், பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் தான் நடப்பட்டதாக கூறி பிரச்சாரம் செய்தார். அதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அந்த செங்கலை ஞாபப்படுத்தும் விதமாக உதயநிதி, ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment