இந்திய சினிமா சினிமா சினிமா செய்திகள்

2021இல் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள்.

2020ம் ஆண்டினை தொடர்ந்து 2021ம் ஆண்டில் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என கூகுள், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டு வரும் படங்களின் பட்டியல் மற்றும் 2020ல் அறிவிக்கப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வலிமை, டாக்டர், மாஸ்டர் ஆகிய படங்களும் வித்தியாச திரைக்கதை காரணமாக ரசிகர்களின் ஆதரவினை பெற்றுள்ள சார்பாட்ட பரம்பரை, கே ஜி எஃப் 2 போன்ற படங்களை என தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்று 2021ம் ஆண்டு வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. மாஸ்டர்

நடிகர்கள் : விஜய்,விஜய் சேதுபதி

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம், இப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்படம் 2021ல் வெளியாகிறது.

2. வலிமை

நடிகர்கள் : அஜித் குமார்,அஜய் தேவ்கன்

நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகும் கிரைம் திரில்லர் திரைப்படம்.  இப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்படம் 2021ல் வெளியாகிறது.

3. கர்ணன்

நடிகர்கள் : தனுஷ்,ராஜீஷா விஜயன்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம், தமிழ் திரைப்பட ரசிகர்களால் மிகவும் இப்படம், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 4. அண்ணாத்த

நடிகர்கள் : ரஜினிகாந்த்,கீர்த்தி சுரேஷ்

நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நடிப்பில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம். இப்படமானது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

 5. தலைவி

நடிகர்கள் : கங்கனா ரனௌத்,அர்விந்த் சுவாமி

அம்மா ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

 6. கே ஜி எஃப் (சேப்டர் 2)

நடிகர்கள் : யஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மிக பெரிய பிரமாண்ட வெற்றி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்திய திரைப்பட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

7. மாநாடு

நடிகர்கள் : சிலம்பரசன்,கல்யாணி பிரியதர்சன்

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகவிருந்த அரசியல் திரைப்படம். இப்படம் பல ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ளது. இப்படம் இந்த 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்ற தகவலை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 8. சார்பட்டா பரம்பரை

நடிகர்கள் : ஆர்யா,கலையரசன்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அரசியல் சாயம் கொண்டுள்ள சமுதாய கருத்துக்கள் உடைய ஒரு அதிரடி திரைப்படம். இப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது.

9. விக்ரம்

நடிகர்கள் : கமல் ஹாசன்,பாஹத் பாஸில்

லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். இப்படம் கமலின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் இறுதி திரைப்படமாக இருக்க கூடும் என ரசிகர்கள் மத்தியில் செய்திகள் பரவிவருகின்றன.

10. கோப்ரா

நடிகர்கள் : விக்ரம்,பிரியா பவானி ஷங்கர்

சீயான் விக்ரம் நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது.

11. டாக்டர்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன்,பிரியங்கா அருள் மோகன்

நெல்சன் இயக்கத்தில் ஒரு நகைச்சுவை திரில்லர் திரைப்படமாக உருவாகும் திரைப்படம். இப்படம் தமிழ் ரசிகர்கள் கவனத்தை பெரிய அளவில் கவர்ந்து தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 12. அயலான்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன்,ரகுல் பிரீத் சிங்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் திரைப்படம். இப்படமானது தமிழ் திரைப்படத்தில் உருவாகும் முதல் ஏலியன் திரைப்படமாகும். ஒரு பிரமாண்ட படமாக உருவாகும் இப்படத்திற்கு தமிழில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலர் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

13. சுல்தான்

நடிகர்கள் : கார்த்தி,ராஷ்மிகா மந்தண்ணா

நடிகர் கார்த்தி நடிக்கும் அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்தில் நடிகை ராஷ்மிக மந்தன்னா நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

14. லாபம்

நடிகர்கள் : விஜய் சேதுபதி,சுருதி ஹாசன்

விஜய் சேதுபதி, ஜனநாதன் கூட்டணியில் உருவாகும் சமுதாய கருத்துகள் கொண்டுள்ள ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். இப்படத்திற்கு சமூக ஆர்வலர்கள் முதல் திரைப்பட ரசிகர்கள் வரை பெரும் வரவேற்பு உள்ளது.

 15. ஜகமே தந்திரம்

நடிகர்கள்  : தனுஷ்,ஐஸ்வர்யா லக்ஷ்மி

பேட்ட படத்தினை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கம் திரைப்படம். நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படம் உலகளவில் பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent posts

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Leave a Comment