சிறுகதை சிறுவர் பக்கம்

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று பரிசளிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவள் செய்து முடித்தாள். கிறிஸ்துமஸ் நாள் வந்தது.

அன்று அதிகாலை, அவளது தந்தை தூக்கத்திலிருந்து விழிக்க காத்திருந்தாள். தந்தை எழுந்ததும் ‘அப்பா இது உங்களுக்காக நான் கொடுக்கும் பரிசு” என்று ஒரு பெட்டியை கொடுத்தாள். அது தங்க காகிதத்தால் மூடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும், கோபம் கொண்டு உனக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கத்தினான்.

நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணம் என்று பதிலளித்தாள். இருப்பினும், கோவத்துடன் உள்ளே என்ன உள்ளது என்று திறந்துப் பார்த்தான். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லாததைக் கண்டு ஆத்திரம் கொண்டு அந்த சிறுமியை அடிக்கத் தொடங்கினான்.

அந்த சிறுமி வலி தாங்காமல் ‘அப்பா என்னை அடிக்காதீர்கள், அதில் நான் உங்களுக்காக நிறைய முத்தங்களை நிரப்பியுள்ளேன்” என்று கூறினாள். இதைக்கேட்ட அவன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, மகளை கட்டி அணைத்துக் கொண்டான்.

நீதி : அன்பை விட முக்கியமானது எதுவுமில்லை. உங்களை நேசிப்பவர்கள் மீது மரியாதையும், அன்பும் செலுத்துங்கள்.

Gift from daughter..!

A poor man named ram lived with his family. He had one wife and one daughter. The daughter wanted to gift her father on Christmas Day. She has done all the work. The day of Christmas came.

That Early morning, she was waiting for her father to wake up from sleep. When her father woke up, She gave a box and said, “Dad, this is my gift for you.” It was covered with gold paper. Upon seeing it, he got angry and shouted how you got so much money.

She replied that I had saved some money little by little. However, opened up with angry what was inside. But when he saw that there was nothing inside, he became resentment and began to beat the little girl.

That little girl said in pain, “Don′t hit me, Dad. I′ve filled a lot of kisses for you.” Upon hearing this, he politely apologized and hugged his daughter.

Moral : There is nothing important than love. Give respect and care on those who are loving you.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment